Posts

பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை !

Image
  பௌசிக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை ! முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (27) உத்தரவிட்டுள்ளார். ஏ. எச்.எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, ​​நெதர்லாந்திலிருந்து அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக கிடைத்த சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளை ஈடுபடுத்தியமை மற்றும் வாகனத்தின் பராமரிப்புக்காக நிதியமைச்சின் சுமார் 10 இலட்சம் ரூபா பணத்தை செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஏ. எச். எம் ஃபௌசி தனது...

ரயிலில் மோதி ஒருவர் பலி !

Image
  ரயிலில் மோதி ஒருவர் பலி ! களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம் !

Image
  இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம் ! இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

ரணிலைத் தவிர வேறு எவர் வென்றாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது போகும் !

Image
  ரணிலைத் தவிர வேறு எவர் வென்றாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது போகும் ! ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவைத் தவிர வேறு எவர் வென்றாலும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையே மீண்டும் ஏற்படுமென, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். அக்கரைப்பற்றில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் கடந்த இரு வருடங்களுக்குள் மாற்றம் இடம்பெற்றுள்ளது. இந்த தேர்தலில் எவரும் இன, மத பேதங்கள் பற்றி பேசவில்லை. ஒற்றுமையாக நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வது பற்றியே சிந்திக்கின்றனர். லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், ரிஷாட் பதியூதீனின் கட்சியும் அரசாங்கத்தில் இல்லாதிருப்பதே இதற்குக் காரணம். நாட்டில் தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியிருக்கின்றார். இதனை மாற்ற வேண்டுமா? அல்லது தொடர வேண்டுமா என்ற கேள்வியே தற்போது உள்ளது. ரணிலைத் தவிர வேறு எவர் வென்றாலும், நாட்டை கட்டியெழுப்புவது யார் என்ற பிரச்சினை மீண்டும் எழும். கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. நானும், அதாவுல்லாவும் மட்டுமே சமூகத்தின் பாதுகாப்...

சஜித்தும் அனுரவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சி - ரணில் !

Image
  சஜித்தும் அனுரவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சி - ரணில் ! வரிகளை குறைப்பதாகவும் பொருட்களின் விலைகளை குறைப்பதாகவும் தமது கொள்கைப் பிரகடனங்களில் சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களை ஏமாற்றி நாட்டை நாசமாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பொருட்களின் விலைகளையும் வரிகளையும் குறைக்க தானும் விரும்புவதாகவும், எனினும், ரூபாயை பலப்படுத்தி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் மாத்திரமே தன்னால் அதனைச் செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதனைத் தவிர வேறு மாற்றுவழி இருந்தால் உடனடியாக ஐ.எம்.எப் உடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் அதனை சமர்ப்பித்து கருத்தரிந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாஸவிடமும் அநுர திசானாயக்கவிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். பிட்டகோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் (25) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இலங்கையன் என்ற வகையிலேயே நாட்டை காக்க ஜனாதிபதி பதவியை ஏற்றேன். அ...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!

Image
  சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு ! சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூல இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 2024.08.30 திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. வேதனைகளுடன், துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய துரோகத்தின் வெளிப்பாடாக தமிழ்மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள். சுமார் 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில் ஏக்கத்துடன் இருக்கும் ப...

காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு !

Image
  காணாமல் போன தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு ! குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.