Posts

யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை ; சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

Image
  யாழில் நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளை ; சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது யாழ்ப்பாணம் பிரதேசத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் துபாய்க்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

Image
  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் ; சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது கொழும்பு, கொம்பனித்தெரு பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 760 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாராஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் விபத்து

Image
  கல்முனையில் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் விபத்து (பாறுக் ஷிஹான்) உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் பகுதியளவில் சேதமடைந்துள்ள போதிலும் உயிரிழிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது வேளாண்மை அறுவடை காலம் ஆகையினால் அதிகளவான நெல் அறுவடை செய்யும் இயந்திரங்கள் உழவு இயந்திரங்கள் மற்றும் இதர வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டு வரப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சியை 5% சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு

Image
  பொருளாதார வளர்ச்சியை 5% சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றில் முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5% சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

கதிர்காமம் பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் உயிர்மாய்ப்பு !

Image
  கதிர்காமம் பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் உயிர்மாய்ப்பு ! கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   இந்த நபர் நேற்று (14) இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அவர் பல நாட்களாக கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதி !

Image
  குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதி ! பலாங்கொடை - கிரிதிகல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பான போத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதை அருந்திய பின்னர் திடீர் சுகவீனமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   குறித்த குளிர்பானத்தை குடித்த பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக 8 வயது சிறுமி நேற்று (12) மதியம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுகயீனத்திற்கான காரணத்தை அறிவதற்காக, சிறுமியின் தந்தையும் குளிர்பானத்தில் இருந்து சிறிது குடித்திருந்தார். பின்னர் அவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிறுமியும் அவரது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பானத்தை குடித்த பிறகு, அவரது வாய் எரிவது போல் உணர்ந்ததாக தந்தை குறிப்பிட்டார்.

தையிட்டியில் தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைப்பது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு சமமானது : கஜேந்திரகுமார் MP !

Image
  தையிட்டியில் தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைப்பது ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு சமமானது : கஜேந்திரகுமார் MP ! தையிட்டியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழ் குடும்பங்களின் காணி உரிமைகளில் கை வைவக்கின்ற போது, ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கை வைப்பதற்கு அது சமமானது என நாங்கள் கருதவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏனைய கட்சிகள் கட்சிபேதங்கனை புறந்தள்ளிவிட்டு இந்த போராட்டத்திற்கு ஆதரவாக போராடும் மக்களிற்கு ஆதரவாக வந்திருக்கின்றன. சட்டத்தின் ஆட்சி குறித்து கதைக்கும் அரசாங்கம் தான் தொடர்ந்தும் இந்த அநியாயத்தை செய்து கொண்டிருக்கின்றது. சட்டத்தின் ஆட்சி என்றால் சட்டத்தை மாத்திரம் கருத்தில் எடுக்கவேண்டும் வேறு எதனையும் கருத்தில் எடுக்ககூடாது. அது பௌத்த விகாரையாக இருக்கலாம், சைவ கோயிலாக இருக்கலாம், முஸ்லீம் பள்ளிவாயிலாக இருக்கலாம், கிறிஸ்தவ தேவாலயமாக இருக்கலாம், சட...