Posts

மாத்தறை சிறைக் கைதிகள் இடமாற்றம் !

Image
  மாத்தறை சிறைக் கைதிகள் இடமாற்றம் ! மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதை அடுத்து இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பதற்றமான சூழ்நிலையுடன், சிறைச்சாலையின் மேல் பாதுகாப்பு அறைகளில் இருந்த சிறை அதிகாரிகளை கைதிகள் கற்களாலும் வேர்களாலும் தாக்கியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த அமைதியின்மையால் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் மங்கள வெலிவிட்ட தெரிவித்தார். இரவு 8.00 மணியளவில் ஏற்பட்ட நிலைமை பின்னர் கட்டுக்குள் இருந்த நிலையில், நள்ளிரவு கைதிகள் மீண்டும் அமை...

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு

Image
  சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு (பாறுக் ஷிஹான்) வீட்டின் அருகில்  விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக  பாதுகாப்பற்ற   நீர் குழியில்  இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான   உடங்கா -02 பௌஸ் மாவத்தை  பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (22) மாலை  இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற  ஆண் பிள்ளை  நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த  குறித்த சிறுவனை   பொதுமக்களுடன்  இணைந்து  பொலிஸாரும் தேடிய நிலையில்  அச்சிறுவனின்  வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதகாப்பற்ற    நீர்க்குழிக்குள்   மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக  மீட்கப்பட்டார். மே...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - நளிந்த ஜயதிஸ்ஸ !

Image
  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையது - நளிந்த ஜயதிஸ்ஸ ! உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான ஒத்துழைப்புக்களை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது. மாறாக அரசாங்கத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. இந்த தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அறிவிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினருடையதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது எதிர்க்கட்சியிலிருப்பவர்களது ஆட்சியிலேயே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் அவர்கள் எதற்காக இந்தளவுக்கு கலவரமடைகின்றனர் என்பது எமக்கு புரியவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால்விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்படுகின்றன. அவை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கலவரமடையத் தேவையில்லை. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இந்த விச...

நுரைச்சோலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம் !

Image
  நுரைச்சோலையில் நிறுத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம் ! புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை காரணமாக செயலிழக்கப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11.00 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அதிக மின் தேவைக்கு ஏற்ப மூன்று அலகுகளும் இயங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன இதனை அறிவித்துள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் !

Image
  பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார் ! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார். சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன

அமெரிக்க வரி விவகாரம் : இலங்கை குழு செவ்வாய் வொஷிங்டன் செல்கிறது

Image
  அமெரிக்க வரி விவகாரம் : இலங்கை குழு செவ்வாய் வொஷிங்டன் செல்கிறது அமெரிக்க ஜனாதிபதி டொனல் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி குறித்து கலந்துரையாடுவதற்கு இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை மறுநாள் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது வரிகளைக் குறைத்தல் மற்றும் இறக்குமதியை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாட உள்ளது. எவ்வாறாயினும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக தினைக்களத்தின் பணிப்பாளர் எமிலி ஆஷ்பி மற்றும் உதவி பணிப்பாளர் பிரெண்டன் லிஞ்ச் ஆகியோருடன் இலங்கை பிரதிநிதிகள் கடந்த வாரம் மெய்நிகர் ஊடான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இதில் ஏற்பட்ட முன்னேற்றங்களின் அடிப்படையிலேயே இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பது தொடர்பாகவும் அது தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பரிந்துரைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமைய...

பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட இருவர் கைது

Image
  பிரபல வர்த்தகரை சுட்டுக் கொலை செய்யத் திட்டமிட்ட இருவர் கைது வர்த்தகரான கம்பஹா ஒஸ்மன் குணசேகர உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.   அதன்படி, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நேற்று (19) கம்பஹாவில் சந்தேக நபர்கள் இருவர் T-56 ரக துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி, சந்தேக நபர்கள் 7 பேர் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.