Posts

காலநிலை மாற்றம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. வௌியிட்ட விடயம்

Image
  காலநிலை மாற்றம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. வௌியிட்ட விடயம் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.   "ரெய்சினா - Raisina" மாநாடு ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்றது. இலங்கை சார்பாக விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, "இவ் மாநாடானது, காலநிலை மாற்றம், பசுமை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் நீதி போன்ற முக்கியமான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான மேடையாக காணப்படுகின்றது. இந்த நிகழ்வை அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF), ORF அமெரிக்கா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (JBIC) மற்றும் கெய்சாய் டோயுகாய் (ஜப்பான் வர்த்தக நிர்வாகிகள் சங்கம்) இணைந்து நடத்தினார்கள். அங்கு ஆற்றப்பட்ட எமது நாடு தொடர்பிலான எனது விசேட உரையானது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் அதற்குரிய நடவடிக்கைகள...

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

Image
  நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது! புத்தளம் நவகத்தேகம - நன்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகோல் பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நன்னேரிய பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மஹா நன்னேரிய மற்றும் கிரிவனாகெட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சில பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நன்னேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

Image
  துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டிருந்தார்.

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Image
  தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது கல்லூரி விடுதியில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த மாணவியை தாக்கிய சக மாணவன் கைது

Image
  பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த மாணவியை தாக்கிய சக மாணவன் கைது கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவர்கள் புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சக மாணவன் ஒருவர் மாணவியை கன்னத்தில் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை தாக்கிய சக மாணவனை வெள்ளிக்கிழமை (23) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலை உயர்வு !

Image
  தங்கத்தின் விலை உயர்வு ! தங்கத்தின் விலை இன்றையதினம் உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு நிலைவரப்படி, தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை ( 24 ) சற்று உயர்வடைந்துள்ளது. தங்க விலை நிலவரத்தின்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.246,000 ஆகவும் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை ரூ.266,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கைப் பெண்

Image
  உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில் இலங்கைப் பெண் 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த 24 பேரில், உலக அழகி போட்டியின் “ HEAD TO HEAD presentation " பிரிவில் ஆசியாவின் முதல் 5 அழகிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அனுதி குணசேகர என்பவர் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அனுதி குணசேகர இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.