ஓட்டமாவடி, மீறாவோடையில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி
இலங்கையில் கொவிட்-19 க்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியது.
அந்த வகையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மீறாவோடை பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களுக்கு முதற்கட்டமாக கொவிட்-19 க்கான தடுப்பூசி ஏற்றப்பட்டது.
ஓட்டமாவடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் நாற்பத்து நான்கு (44) பேருக்கு கொவிட்-19 க்கான தடுப்பூசி மீறாவோடை பிரதேச வைத்தியசாலையில் வைத்து ஏற்றப்பட்டது.
ஐந்து இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவினால் இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இத்தடுப்பூசியானது, கொரோனா ஒழிப்புக்காக முன்னிலையில் செயற்படுகின்ற சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிசார் உட்பட பாதுகாப்புப் பிரிவினருக்கு முதலாவதாக வழங்கப்படவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதற்காக முன்னிலை வகிக்கும் துறையினர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்த வகையில், நாடளாவிய ரீதியில் இன்று சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
Comments
Post a Comment