கொரோனாவினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகளில் மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும்




இலங்கையில் நிகழும் கொவிட் 19 மரணங்களின் போது ஒவ்வொரு

 சமூகங்களினதும் மரணங்கள் தொடர்பான மத நம்பிக்கை மற்றும் கலாசார மரபுகளுக்கு இடமளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் டுவிட்டர் தளத்தினூடாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.



இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஐக் கடந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன் சர்வதேச மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


இதன் மூலம் மக்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு மத நம்பிக்கைகளுக்கு இணங்க விடை கொடுக்கும் உரிமை கிட்டுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகம் குறிப்பிட்டுள்ளது


இலங்கையில் கொவிட் 19 இனால் மரணிப்பவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை மறுப்பது குறித்து அமெரிக்கா கவலை வௌியிட்டு இரண்டாவது சந்தரப்பம் இதுவாகும்.


இந்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உடல்கள் கட்டாய தகனம் செய்யப்படுவதற்கு விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !