கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைப்பு
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை
வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று ஒப்படைப்பு
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக குளிரூட்டியொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இன்று (27.01.2021) புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
காத்தான்குடி மக்களின் நிதிப் பங்களிப்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இந்த குளிரூட்டி கொள்வனவு செய்யப்பட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கொவிட் தொற்றினால் மரணிக்கும் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் ஜனாசாக்களை வைப்பதற்காக இந்த குளிரூட்டி வாங்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதி நிதிகள் இதனை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஒப்படைத்தனர்.
இந்த குளிரூட்டியில் ஒரே நேரத்தில் 20 ஜனாசாக்களை வைக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனனத்தின் அயராத முயற்சியாக இது வாங்கப்பட்டுள்ளது.
சம்மேளன பிரதி நிதிகளில் சிலர் இன்று முழு பகல் நேரத்தையும் இங்கு செலவளித்து இந்த குளிரூட்டியை வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதையும் இதை ஒழுங்குபடுத்;துவதில் ஈடுபட்டதையும்
காணமுடிந்தது.
Comments
Post a Comment