கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க வீடுவீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு





கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க

 வேண்டி வீடுவீடாக சென்று விழிப்பூட்டும் நிகழ்வு நேற்று (27) இடம்பெற்றது.


கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் த.யசோதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான கே.எல்.அஸ்மி, எப்.நபீரா, இக்பால் சனசமூக நிலைய தலைவர் ஏ.எல்.லியாப்தீன், கிறிசலிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


இத் திட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீடுவீடாக சென்று பொது மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.


இவ் விழிப்பூட்டல் திட்டத்திற்கு கிறிசலிஸ் நிறுவனம், வாழைச்சேனை பிரதேச சபை, இக்பால் சனசமூக நிலையம், சிவன் தீவு வளர்பிறை சனசமூக நிலையம் ஆகியவை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !