குச்சவெளி பிரதேசத்தில் 3000 ற்கும் மேற்ப்பட்ட ஏழைக்குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுமார் 1800 ஏக்கர் கடலோர காணிகள் ரைகம் ஈஸ்ட்டன் சோல்ட் பிரைவட் லிமிட்டட் வசம்.



-எப்.முபாரக் -

குச்சவெளி பிரதேசத்தில் 3000 ற்கும் மேற்ப்பட்ட ஏழைக்குடும்பங்களின் 

வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுமார் 1800 ஏக்கர் கடலோர காணிகள் ரைகம் ஈஸ்ட்டன் சோல்ட் பிரைவட் லிமிட்டட் வசப்படுத்தியுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் மொஹிதீன் முஸம்மில் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் கட்சியின் காரியாலயத்தில் இன்று(31) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:


திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச சபைக்கு உற்பட்ட சுமார் 1800ஏக்கர் கடலோர காணிகள் 2008 ம் ஆண்டு 35 வருட குத்தகை அடிப்படையில் கைத்தொழில் அமைச்சால் வழங்கப்பட்டதன் பின்விளைவுகள் தற்சமயம் அப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கடினமாக தாக்கியுள்ளது என்பது பல ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. 


இந்த 1800 ஏக்கர் கடல் ஓர பிரதேசத்தில் சுமார் 3000 மேற்ப்பட்ட ஏழை குடும்பங்கள் யுத்தத்தில் வீட்டு தலைவர்களை இழந்த பெண்கள் போன்றோர் அன்றாட வாழ்வாதாரத்தை மிகவும் சந்தோசமாக சுயமாக எந்த வித முதலீடும் இல்லாமல் இயற்கை முறையாக இறால் பிடிக்கும் தொழிலை செய்து செய்து சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். 


2008 ஆம் ஆண்டு இந்த இடம் உப்புத் தொழிற்சாலை அமைப்பதற்காக திட்டமிட்ட செயலாக பாரிய அளவில் தொழில் வாய்ப்பு வழங்க முடியும் என்ற ஒரு மாயைக் கூறி அப்பிரதேச மக்களை திசைதிருப்பி இந்த காணிகள் 35 வருட ஒப்பந்தத்தில் தம்வசமாக்கிய இந்த ஈஸ்டன் சோல்ட் பிறைவேற் லிமிட்டெட் இப்பிரதேச ஏழை மக்களின் வயிற்றில் அடித்து வெறுமனே சுமார் 50 தொழிலாளர்களுக்கு மட்டுமே தற்காலிக தொழில் வழங்கியுள்ளது. 


அத்தோடு தற்சமயம் ஒரு மறைமுகமான குடியேற்ற முயற்சியும் நடைபெற ஆயத்தமாக உள்ளதாகவும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன. 


இவைகளை அன்று அரசாங்கத்தோடு இருந்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்சமயம் இந்த ஒப்பந்தம் 16 வருடங்களை தாண்டிய நிலையில் மீதி காலத்தின் பின் மீண்டும் இந்த நிலத்தை திருகோணமலை மாவட்ட மக்கள் கைவசம் வந்து சேரக்கூடிய முறையில் இப்போது இருந்தே இதற்கான விடயங்களை கையாழும் முயற்சிகளை தேசிய விடுதலை மக்கள் முண்ணனி நடவடிக்கை எடுத்து எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !