இலங்கை சட்டமொழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது ; ஐக்கியதேசிய கட்சி.



இலங்கை சட்டமொழுங்கில்லாத நாடாக மாறியுள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கபண்டார இதனை தெரிவித்துள்ளார்.


சட்டத்தை அனைவருக்கும் பொதுவான விதத்தில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஒருநாடு ஒரு சட்டம் என்பதை நடைமுறைப்படுத்தப்போவதாக தெரிவித்துக்கொண்டு ஆட்சிக்குவந்த அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட விதத்தில் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்றது அதிகாரம் மிக்கவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சட்டமாஅதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு போன்ற சுயாதீன அமைப்புகளின் சுதந்திரத்திற்கு அரசாங்கம் சவால் விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ள பாலித ரங்க பண்டார அரசாங்கத்துடன் தொடர்புள்ளவர்களிற்கு எதிரான பல வழக்குகள் விலக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.


இதன் காரணமாக மக்கள் சட்டநடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !