ஐக்கிய நாடுகள் சபை விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் ரீதியான உறவை உயர்ந்த மட்டத்தில் பேணுவதாக ரஷ்யா அறிவிப்பு.
இறையாண்மை, ஜனநாயக மற்றும் சமூக நோக்குடைய அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.
ரஷ்யாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஜாகரோவா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை தாம் உயர் மட்டத்தில் பேணிவருவதாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன் ரஷ்யாவின் தேயிலை இறக்குமதித் துறையில் இலங்கை பாரிய பங்காற்றி வருவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது இலங்கையின் எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தமது வாழ்த்துக்களையும் இதன் போது வௌியிட்டுள்ளது
Comments
Post a Comment