190 நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள காத்திருப்புப் பட்டியலில்... இலங்கைக்கு முன்னுரிமை வழங்கிய இந்தியா.



190 நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள 

காத்திருப்புப் பட்டியலில் உள்ள போதிலும், இந்தியா இலங்கைக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்



சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கோரிக்கைக்கு அமையவே, இந்திய அரசாங்கம் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்



குறித்த தடுப்பூசியின் பெறுமதி 3 முதல் 4 அமெரிக்க டொலர் வரை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதனிடையே, சீனாவினால் 3 லட்சம் தடுப்பூசிகள் விரைவில் வழங்கப்படும் எனவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்


எனினும், தேசிய ஓளடதங்கள் ஒழுங்கப்படுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைக்கும் வரை தாம் பொறுமையாக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதேவேளை, உலக சுகாதார ஸ்தாபனம் 20 வீதமான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலணியின் தலைவரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !