இந்தியாவில் இருந்து மேலும் மூன்றரை மில்லியன் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.



இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி AstraZeneca Covishield

 கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, 2 தசம் 5 மில்லியன் AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயளாலர் வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ சி சில்வா தெரிவித்துள்ளார்.



இதன்படி, குறித்த தடுப்பூசிகளை எதிர்வைரும் ஒரு மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், 3 தசம் 5 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் அமல் ஹர்ஷ சி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட AstraZeneca Covishield கொரோனா தடுப்பூசி தற்போது சுகாதார பணியாளர்க, முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.


இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில் குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !