தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை.



கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களுக்கு

அருகில், அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.



தடுப்பூசி ஏற்றியப் பின்னர், ஏதாவது, ஒவ்வாமை ஏற்பட்டால், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வைத்திய குழுவொன்று, அங்கு தயார் நிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ள சுகதார பிரிவு, தடுப்பூசியை ஏற்றும் முன்னர், ஏற்றிக்கொள்பவரின் விருப்பத்தைக் கடிதம் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது,



இந்நிலையில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு சுகாதார அலுவலக சபையின் உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள, அதிருப்தியை வெளியிட்டு உள்ளவர்களுக்குப் பலவந்தமாக ஊசி ஏற்றப்படாதென, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.



இந்தத் தடுப்பூசியானது இலங்கையின் பிரதான 6 வைத்தியசாலையின் பணியாளர்களுக்கு இன்று (29) வழங்கப்படவுள்ள நிலையில், முதலாவதாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் பணியாளர்களுக்கே இத்தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய, இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாக உள்ளதுடன், இதற்காக 5 இடங்கள் வைத்தியசாலைக்குள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !