இன்று நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை..
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்
அத்துடன் மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm வரை யிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 mm வரை யிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
*****************************
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை,மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இக் கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40-50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப் பான நிலையில் காணப்படும்.
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
Comments
Post a Comment