நாட்டுக்கு அன்புள்ள மக்களாக மலையக சமூகம் எப்போதும் இருந்து வருகின்றனர்..



27.01.2021

இன்று(27) எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.


நான் தொழிற்சங்க தலைவர் என்ற அடிப்படையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களித்த பிரகாரம் 1000 ரூபா  அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்துகிறேன்.பல கட்ட வாக்குறுதிகளுக்கு பிறகு இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திலும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. 


245000 மக்கள் தோட்டத்துறையில் வாழ்கின்றனர். இதில் 40 % சிங்கள மக்களாகும். கேகாலை மற்றும் இரத்தினபுர மாவட்டங்களிலுள்ள தோட்டங்களில் பெருன்பான்மையினர் சிங்களவர்கள், இதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் தொழிற் சங்கம் என்ற அடிப்படையில் சாதி,இனம்,மதம் பார்க்காமல் நீதியாக நடந்து கொள்கிறோம்.இதை விளங்காமல் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றனர்.


கால நிலை மாற்றம் ஏற்படுவதை கருத்திற் கொள்ள வேண்டும்.6 மாதம் மழை காலம் இக்காலத்தில்

இறப்பர் குறைவு. வெயில் காலத்தில் தேயிலை குறைவு ஆகவே மக்களின் நிலைமை குறித்த சிந்திக்க வேண்டும்.சம்பளப் பிரச்சிணையை அரசாங்கம் எதிர்க் கட்சி என்று பாராமல் மனிதாபிமானமாக பார்த்து பேசுங்கள்.


நாட்டுக்கு அன்புள்ள மக்களாக மலையக சமூகம் எப்போதும் இருந்து வருகின்றனர்.இனவாதம் மத வாதம் அவர்களிடம் இல்லை.அமைதியான மக்கள் சமூகம்.கொவிட் பிரச்சினை காலத்திலும் கூட நாட்டிற்காக அந்த மக்கள் வேலைக்குச் சென்றனர். 


ஜனவரி மாத சம்பளம்,பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அடிப்படை சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் இல்லை என்றால் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஈடுபடுவோம்.முழு மலையகமும் ஸ்தம்பிக்கும் விதமாக நாங்கள் ஏற்பாடு செய்வோம்.ஜனவரி மாதம் முதல் எங்களுக்கு அடிப்படை சம்பளம் 1000 ரூபா கிடைக்க வேண்டும்.அதனோடுனைந்து சட்ட ஏற்றபாடுகளிலுள்ள ஏனைய நலன்புரித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.


இந் நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் 13 ஆம் திருத்தம் குறித்து பேசுகின்றனர்,மாகாண சபை முறைமை நாட்டுக்கு வேண்டும், ஒன்றித்த இன ஒற்றுமை இங்கு உண்டு ஆகவே மாகாண சபை முறைமை நாட்டுக்கு வேண்டும். இதன் மூலம் அந்த அந்த இனத்திற்குரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இதன் மூலம் ஏற்படுகிறது என்று தெரித்த அவர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் குறித்து பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.


நான் இலங்கை பிரஜை, இந்திய வம்சாவளியானாலும் நான் ஆறாவது தலைமுறையைச் சேர்ந்தவன்,இலவச கல்வி, இலவச சுகாதாரம் என்பற்றை பெற்று மக்கள் ஆதரவில் மூன்றாம் தடவை பாராளுமன்றம் வந்துள்ளேன்.


இது எனது நாடு எனது நாட்டு செத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பதை நான் எதிர்கிறேன். கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படுவதை நான் முற்றாக எதிர்கிறேன்.வேண்டும் என்றால் நாட்டிற்காக கிழக்கு முனையத்தை பாதுகாக்க மலையக சமூகம் முன்னிற்கும் என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !