வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று சந்தேக நபர்கள் கைது #சம்மாந்துறை பொலிஸார்



பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

வீடுடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த

குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை(29.01.2021) அன்று நள்ளிரவு வேளை அம்பாறை சம்மாந்துறை மலையடி கிராம பிரதேசத்தில் வீடுடைத்து தங்கநகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசர பிரிவான 119 இலக்கத்திற்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது.


குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியொகத்தர்களான ஆரியசேன மற்றும் துரைசிங்கம் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பிரதேசத்தை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் காலை கைது செய்யப்பட்டனர்.


இதன் போது கைதானவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 5 அரை பவுண் தங்க நகைகள் 19,500 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.


அத்துடன் கைதான மூவரும் இன்றைய தினம்(30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !