கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றும் பணி ஏறாவூரில் இன்று முன்னெடுப்பு.




உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொவிட் 19

 தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள உலகம் போராடி வருகின்ற நிலையில் , இந்திய அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 5இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றும் பணி நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு என வழங்கப்பட்ட  3400 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளை ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது.


அதன் பிரகாரம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் மருத்துவர்கள் ,  தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று சனிக்கிழமை காலை ஏறாவூர் வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் மௌஜூத் தலைமையிலும், 


ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கான தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். சாபிரா வஸீம் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !