புதிதாக இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டனர்




நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார

பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


புதிய வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறித்திருந்த போதிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுப்பவில்லை என வைத்தியர் ஷரித அலுத்கே தெரிவித்துள்ளார்.


பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழுவினால் நேற்று (26) இதனை மக்களுக்கு அறிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு இனங்காணப்பட்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக கண்டறிப்பட்டுள்ளதால் அதி தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !