துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை ஒருபோதும் விற்க மாட்டோம் - உறுதிமொழி அளித்தார் பிரதமர் மகிந்த



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



தங்காலையில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து ஒரு பிரச்சினை எழுந்துள்ளது மற்றும் எதிர்க்கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறதே என ஊடகவியாளர் கேள்வி எழுப்பினர்.



இதற்கு பதிலளித்த பிரதமர்,"நிச்சயமாக, எதிர்க்கட்சியை குறை கூற எதுவும் இல்லை. நாங்கள் அதை யாருக்கும் கொடுக்க மாட்டோம். இது விற்கப்படவில்லை அல்லது குத்தகைக்கு விடப்படவில்லை. அது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அது தெரியும் என்று நினைக்கிறேன். நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறுகிறோம்.



எனவே இது ஒரு பிரச்சனையாக இருக்காது. வேலைநிறுத்தம் செய்ய எதுவும் இல்லை.



நீங்கள் வந்து என்னிடம் சொன்னால் நான் உண்மையிலேயே அது தொடர்பில் விளக்குவேன்.



அமைச்சரவையில் 99 சதவீதம் பேர் அதை விற்கக் கூடாது என்று கருதுகின்றனர். இந்த இரண்டையும் விற்பனை செய்வது எங்கள் கொள்கை அல்ல. அது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை.



ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை. ” என அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !