அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு. அம்பாறை மாவட் டத்தில் சேதனப் பசளையைப் பாவித்து அப்பிள் பழங்களை உற்பத்தி செய்யலாம் என்பதை அட்டாளைச்சேனையில் ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோ கஸ்தர் ஏ.எல். அப்துல் கபூர் நிரூபித்துள்ளார். அட்டாளைச்சேனையிலுள்ள குடி யிருப்பு நிலமொன்றில் "மாசான்" எனும் அப்பிள் கொடியை நாட்டி யுள்ளார். அத்துடன் உப உணவுப் பயிர்ச்செய்கை, வீட்டு மட்டதிலான கால்நடை வளர்ப்பு, சிறுசிறு மரக்கறிப்பயிர்ச் செய்கை போன்றவைக ளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு எண்ணக் கருவுக்கு அமைவாக “சேதனப் பசளையை பாவிப்பதன்மூலம் "நஞ் சற்ற உணவை உட்கொள்வோம்" என்ற தொனிப் பொருளால் மிகவும் கவரப்பட்டகபூர், தனதுமுயற்சி புது மையானதாக இருக்கவேண்டுமென நினைத்தார். அவ்வாறே "மாசான்" எனும் ஒருவகை அப்பிள் மரக்கன்றுகள் சிலவற்றை நாட்டினார். தற்போது அப்பிள் மரம் பழங்களைக் காய்க்க தொடங்கியது. கடந்த திங்கட்கி ழமை இவர் ஒரு மரத்தில் மாத்திரம் சுமார் 75 க்கு மேற்பட்ட காய்களைப் பறித்துள்ளார். இதேவேளை இவர் சிறந்த வாச னைத்திரவியங்களை உற...
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்றை திங்கட்கிழமை (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். லியோபோகான் (LEOPOCON Sri Lanka) எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் அடிப்படையிலேயே சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் இந்த சிறுத்தையின் சடலம் கிடந்ததாகவும், இவ் வருடத்தின் நடுப்பகுதி வரை 14 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளது என லியோபோகான் என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொத்மலை, கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது 2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், மற்றும் 278 விமானப்படை வீரர்கள் உள்ளடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களைக் கைது செய்ய, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment