கிண்ணியா விவசாயிகள் எதிர் கொள்ளும் சோக நிலைமை தொடர்கிறது..
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப்
பிரிவுக்குட்பட்ட புளியடிக் குடா, பக்கிரான் வெட்டை, வன்னியனார் மடு போன்ற விவசாயப் பகுதிகளில் இரவு பெய்த கடும் மழை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நீர் இல்லாதபோது இந்த ஆறுகளை குறுக்காக கட்டுவதும் மழை, வெள்ளம் வருகின்ற போது அவற்றைக் கழற்று வதும் அடிக்கடி நடைபெறுகின்ற விடயமாகும்.
இந்த நிலைமை விவசாயிகளுக்கு உயிர் அச்சுறுத்தலையும் கூட சில நேரம் ஏற்படுத்துகின்றது. குறித்த ஆற்று நீரில் முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்திருப்பது மேலும் அச்சத்தை உண்டுபண்ணுகிறது. இந்த நவீன காலங்களில் 10 அடி உயரத்திற்கு மேற்பட்ட நீரில் இவ்வாறு விவசாயிகள் கஷ்டப்படுவது நவீன காலத்தில் இப்பிரதேசத்தில் மாத்திரமே நடைபெறுகின்றது.
நீர்ப்பாசனத் திணைக்களம், அரசியல் தலைமைகள், அதிகாரிகள் எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டும் ரெகுலேட்டர் பொறிமுறை இன்னும் செய்து தரப்படாமை மிகவும் வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றார்கள்.
எனவே இனிமேலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை இந்த விவசாயிகளுக்கு ஏற்படக்கூடாது எனக்கருதி இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களிலும் ரெகுலேட்டர் பொறிமுறைமை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுகின்றார்கள்.
Comments
Post a Comment