கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு விமல் கடும் எதிர்ப்பு.



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பது என தீர்மானித்தால் அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் முன்வரவேண்டும்என அமைச்சர் வேண்டுகொள் விடுத்துள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.



கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தால் தீர்க்ககரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.



இன்று இது தொடர்பில் அமைச்சர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவரின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021