#ஒரு நபரின் ஆங்கில கையெழுத்தை(Handwriting)  வைத்து அவருடைய குணநலன்களை கண்டிப்பாக கணக்கிட முடியும். இந்த துறைக்கு "Graphology" (க்ராபோலஜி) என்று பெயர்.



கையெழுத்தில் உள்ள எழுத்துக்களின் வடிவங்கள், ஏற்ற இறக்கங்கள், எழுத்தின் அளவு முதலியவற்றை அடிப்படையாக கொண்டு ஒருவரின் குணங்களை கணித்துவிட முடியும்.


இதைப்பற்றி ஏற்கனவே சில மாதங்கள் முன்னர் வாசித்த பொழுது, என் நண்பரிடம் சோதித்து பார்த்தேன். கிட்டத்தட்ட 70-80 சதவீதம் சரியாக இருந்தது.


இந்த க்ராபோலஜியை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விட வேண்டாம். தடயவியல் துறையில் கூட இது பயன்படுகிறது குறிப்பாக பிளாக்மெயில் கடிதங்களிலிருந்து ஆதாரம் திரட்டும் பொழுது!


 இப்போது சில காரணிகளை கொண்டு எடுத்துக்காட்டுகிறேன்.


#பேனாவின் அழுத்தம்(Pen pressure)

அழுத்தம் ஆழமாக (hard pressure) இருந்தால் நீங்கள் அடிக்கடி பதற்றம் அடையும் நபர் மற்றும் கோவம் கொள்ளும் நபராக இருக்கலாம்.

லேசான அழுத்தம் (soft pressure) கொண்டு எழுதுபவர் என்றால் மிகவும் உணர்ச்சிவசப்படும் நபர்; மற்றும்  அடுத்தவர்களின் நலனை போற்றுவதில் மிகுந்து ஆர்வம் கொண்டவர்.


#எழுத்தின் அளவு:

பெரிதான எழுத்தாக இருந்தால் நீங்கள் தைரியம் மிக்க நபர்; எல்லாரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர் 


#சிறிய வடிவிலான எழுத்துக்கள் கொண்டிருப்பவர் என்றால் நீங்கள் கூச்ச சுபாவம் உடையவர்; மேலும், உங்களின் நெருங்கிய வட்டத்தினரிடம் மட்டுமே எளிதில் நட்பு பாராட்டுவீர்கள்.


#சொற்களின் இடைவெளி:

சொற்களின் இடையே அதிக இடைவெளி விட்டு எழுதுபவர்கள் தனிச்சையாகவும் சுதந்திரம் பொருந்தியவர்களாக திகழ்வார்கள்


#சொற்களை நெருக்கி எழுதுபவர்கள் கூட்டமாக குழுவாக செயல்படவே விரும்புபவர்கள்.


#சொற்களின் சாய்வு (Slant):

வலது பக்கம் சாய்வாக எழுதினால் நீங்கள் புதிய நபர்களை சந்திப்பதிலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதிலும் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் நபர்


#இடது பக்கம் சாய்வாக எழுதும் பழக்கம் உடையவர் என்றால், நீங்கள் மனம் விட்டு பழகாத ரிசர்வ்ட் தன்மை கொண்டவர்.


#எழுத்துக்களின் வடிவம்:

உருண்டையான எழுத்துக்களாக இருந்தால் நீங்கள் கற்பனை திறன் மற்றும் படைப்பு திறன் கொண்டவர்


#குச்சி குச்சியாக எழுதுபவர் என்றால் நீங்கள் புத்திசாலித்தனம் மிக்கவர் அதே சமயம் உங்களின் ஆக்ரோஷத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பவர்.


#வேகம்:

நீங்கள் வேகமாக எழுதுபவர் என்றால், உங்களுக்கு நேரத்தை விரயம் ஆக்குவது பிடிக்காது மற்றும் பல விஷயங்களில் நிதானமற்று முடிவெடுப்பீர்கள் !


#பொறுமையாக நேரம் எடுத்து எழுதுபவர்கள், தன்னம்பிக்கை உடையவர்கள். மேலும், ஒரு செயலை முறையாக திட்டமிட்டு நிதானமாக செயல்படுத்துபவர்கள்.


நன்றி.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !