அனுமதியின்றி மாட்டிறைச்சி கொண்டு சென்றவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் .



சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி மாட்டிறைச்சி கடைக்கு வழங்குவதற்காக முச்சக்கரவண்டியில்

மாட்டிறைச்சியை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதிக்கும் மாட்டிறைச்சி கடை உரிமையாளருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான் பணம் கட்ட தவறின் இருவருக்கும் 5 மாதம் சிறைத் தண்டனையும் விதித்துள்ளார்.

யாழ்.குருநகரில் உள்ள மாட்டிறைச்சி கடைக்கு வழங்குவதற்காக 97 கிலோ கிராம் மாட்டிறைச்சியை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்ற சாரதியும் மாட்டிறைச்சி கடை உரிமையாளரும் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் அ.சுரேஷ்குமாரிடம் அகப்பட்டுக் கொண்டனர்.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருவரையும் குற்றவாளிகளாக கண்ட நீதிவான் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்ததுடன் பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இருவருக்கும் 5 மாதம் சிறைத் தண்டனையும் விதித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !