வாகன இறக்குமதி இடைநிறுத்தப் பட்டதால், 4 இலட்சம் பேர் பாதிப்பக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அந்நிய செலாவணி, வெளிச்செல்லும் அளவை
குறைப்பதன் மூலம் வாகன இறக்குமதி துறையை பாராமரிப்பதற்கு திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் அரோஷ் ரொத்ரிகோ நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2020 மார்ச் 19 ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை முற்றிலும் இடைநிறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதன் விளைவாக இந்த துறையில் பணிபுரியும் ஒரு இலட்சம் பேர் நேரடியாக வேலையிழக்க நேரிடுவதோடு அவர்களை சார்ந்து வாழும் 4 இலட்சம் பேர் பாதிப்பக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Siva Ramasamy
Comments
Post a Comment