விவசாய, கால்நடை பண்ணைகள் உற்பத்தி திறனை அதிகரிக்க இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை.....
விவசாய, விதைகள் மற்றும் கால்நடை பண்ணைகள் போன்ற உற்பத்தித் துறைகளின் செயல்திறனையும்
உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை.....
கம்பஹா மாவட்டத்தின் விவசாய, விதைகள் மற்றும் கால்நடை பண்ணைகள் போன்ற உற்பத்தித் துறைகளின் செயல்திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த அவர்களின் மூலம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, வல்பிட்ட பிரதேசத்தின் விவசாயத் துறையிலுள்ள பல நிறுவனங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்ட போதே அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.
அமைச்சர் இங்கு பின்வரும் நிறுவனங்களுக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டார்.
1. திவுலபிட்டிய வல்பிட்டயில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் கீழுள்ள விதை உற்பத்தி பண்ணை
2 .வல்பிட்ட விவசாய பயிற்சி நிலையம்
3 .வல்பிட்ட யில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் கீழுள்ள ஆராய்ச்சி மற்றும் நாற்றுமேடை
4 .வல்பிட்ட தெங்கு ஆராய்ச்சி நிலையம்
5 .தெங்கு உற்பத்தி நிலையத்தின் வல்பிட்ட பிராந்திய அலுவலகம்
6 .கொடதெனிய, வடமாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்துக்குச் சொந்தமான பண்ணை முகாமைத்துவ நிலையம்.
இங்கு உற்பத்தித் துறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குதல், பயிர் செய்யப்படாத நிலங்களில் பயிர் செய்தல், பெறுமதி கூடிய உற்பத்தியை பெருக்குதல், விலங்கு மற்றும் பண்ணை தயாரிப்பு உரிமையாளர்களுக்கு விசேட பயிற்சி அளித்தல், புதிய செயல்திட்டங்களைச் செயற்படுத்தல், அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்குதல், பயிற்சி பாடநெறிகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் உற்பத்தி மற்றும் வருமான அபிவிருத்தி தொடர்பாகவும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மேற்கூறிய நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முனீரா அபூபக்கர்
Comments
Post a Comment