பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது.
பௌத்த விஹாரைகள் தொடர்பான சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது
என்று நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சட்டத்தை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் கிடையாது என அவர் வலியுறுத்தினார்.
நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். தாம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு தவறாக விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் சட்டமா அதிபர், சிங்கப்பூர் சட்டமா அதிபரோடு கலந்துரையாடி இருப்பதாக அமைச்சர் அலி சப்ரி கூறினார்.
Comments
Post a Comment