வீட்டின் உரிமையாளரை பயமுறுத்த, புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலையை வேறாக்கி வீட்டு வளவில் வீசிய மூவர் கைது. #மட்டக்களப்பு
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவு ஒன்றில் மனிதத் தலையை வீசிய சம்பவத்துடன் தொடர்புடைய
மூவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து எடுக்கப்பட்டடதாக பொலிஸாரின் முதலகட்ட விசாரணையின்போது கண்டறியப்பட்டுள்ளது.
தலை வீசப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தவே மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்திலிருந்து அதன் தலையை எடுத்து வீசியதாக சந்தேக நபர ஏற்றுக் கொண்டுள்ளனர்
வியாழக்கிழமை(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த மனிதத் ததலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தோண்டி எடுக்கப்பட்ட தலை அதே பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய, கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருடைய தலையென இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(என். ஹரன்) metronews
Comments
Post a Comment