கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் சாதகநிலை..



கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின்  உடல்களை அடக்கம்

 செய்வதற்கான அனுமதி மறுப்பு மற்றும் சமூக மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்து நடவடிக்கைகள் எடுப்பதற்காக  பிப்ரவரி 5 ஆம் திகதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்தில்,  அரசாங்கத்தின் நட்பு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

 இதன்போது  சில கட்சித் தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

 கூட்டத்தில் நிலைமையை விளக்கிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ,

சுகாதாரத் துறையின் இறுதி பரிந்துரை பெறும் வரை முடிவெடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக “மகா சங்கத்திலிருந்து எதிர்ப்பு” எழுந்துள்ளது என்று கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

உடல்களை அடக்கம் செய்வது குறித்து  பேராயர்களுடன் கலந்துரையாடவும் பிரதமர்,  கட்சித் தலைவர்களுடன் ஒப்புக் கொண்டார்.

 இதனை அடுத்து , பிப்ரவரி 10

 மாலை 5.00 மணிக்கு அலரிமாளிகையில்   மகா சங்கதினருடன் 

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

சுகாதாரத் துறை பரிந்துரை செய்தால் அடக்கம் செய்வது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று

கலந்துரையாடலின் முடிவில் மகா சங்கதினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்பிறகு, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுகாதார அதிகாரிகளுடன் சிறப்பு கலந்துரையாடி, சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினர்.

 அதன்படி, கோவிட்- 19 இனால் உயிரிழக்கும்  சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், தமிழர்கள், ,கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உடல்களை  அடக்கம் செய்வது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட சுகாதார நிபுணர்களின் குழுவின் இறுதி பரிந்துரை இன்று அல்லது நாளைய தினம்  வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இன்றைய மவ்பிம சிங்கள மொழி பத்திரிகை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !