மாந்திரிக சிகிச்சை அளிக்கபட்ட சிறுமி பரிதாபமாக பலி.



மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில்

 மாந்திரிக சிகிச்சை அளிக்கபட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுமி வசித்த பகுதியில் மாந்திரிகம் செய்துவரும் பெண்ணொருவரே இந்த பூசைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பெற்றோர்கள் குறித்த சிறுமியை பூசைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், அவருக்கு ஒருவகை எண்ணை பூசப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமி மயக்கமடைந்ததை தொடர்ந்து, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த மீஹாவத்தை பொலிஸார் குறித்த பெண் மத்திரவாதியை கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !