காத்தான்குடி நகர சபை பசுமை நகரமாக தெரிவு.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்
உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட தெரிவு போட்டியில் காத்தான்குடி நகர சபையானது பசுமை நகர் செயற்றிட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையை செயல்படுத்துவதற்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டமும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ், காத்தான்குடி நகரை பசுமை நகராக்கும் செயற்திட்டம் தொடர்பாக ஆலோசனை அபிப்பிராயங்கள் வழங்கும் கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (23) காத்தான்குடியில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட இணைப்பாளர் எம் . ஷமீர் சாலிஹின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் என் . மணிவண்ணன் , காத்தான்குடி பிரதேச செயலாளர் யு . உதயசிறீதர், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ். எச் .எம் . அஸ்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment