45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவரும் கைது.



ஹொரண பகுதியில் வைத்து 45 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபர்கள் கடத்தலுக்கு  பாவித்த  வேனின் நம்பர் பிளேட் இராணுவ வாகனம் போல காட்சிப்படுத்தப்பட்டதாக போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா தெரிவித்தார்.

வேனின் சாரதி   இராணுவ சீருடையும் அணிந்திருந்தார்.

வேனில் இருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார், அவர் இராணுவத்தை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்தது. 

வேன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள இமடுவ பகுதியில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து களனிகம பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 2 மாத காலத்திற்குள் கைப்பற்றப்பட்ட 4 வது பெரிய அளவிலான போதைப்பொருள் இது என்று போலீஸ் மீடியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பானதுரை  மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போலீஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021