திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளை பலப்படுத்துவதன் ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமுடியும்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருமலை மாவட்ட அரசியல்வாதிகளை பலப்படுத்துவதன்
ஊடாகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமுடியும்முள்ளிப்பொத்தானையில் வைத்து முன்னால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன.
ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் இன்று (28) இடம் பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற சில இயற்கை வளங்களையும் எமது நாட்டையும் பாதுகாக்கவும் ஒரு முன்மாதிரியான இடமாக நாங்கள் அதனை எதிர்காலத்தில் கொண்டு செல்லவுள்ளோம் டி எஸ் சேனாநாயக்க பரம்பரை போன்ற ஆட்சியை இந்த நாட்டு மக்களின் மூவினங்களை இணைத்துக் கொண்டு அதிகாரங்களை கொண்டு ஆட்சியை திட்டமிட்டுச் செய்வோம் தமிழ் சிங்கள முஸ்லிம் என இனமத பேதமற்ற முறையில் இதனை வழி நடாத்தி ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துவதன் ஊடாகவே இந்ந நாட்டை கொண்டு செல்லோம் என்றார்.
Comments
Post a Comment