குர்ஆனை தடை செய்து விட்டு பொதுபல சேனாவை தடை செய்ய வாருங்கள்..
தௌஹீத் வாதத்தை தடை செய்ய வேண்டும் என உயிர்த்த ஞாயிரு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதன் மூலம் குர்ஆனை தடை செய்யவே கூறப்பட்டுள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கூறினார்.
பொதுபல சேனா அமைப்பினை தடை செய்யும் முன்னர் குர்ஆனை தடை செய்து விட்டு வருமாறு அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளமை தெளிவாக தெரிகிறது எனவும் , இந்த அறிக்கைக்கு அமைவாக ஹிஸ்புல்லாஹ் எதுவும் செய்யவில்லை, உலமா சபை எதுவும் செய்யவில்லை,வாமி எதுவும் செய்யவில்லை, தப்லீக் ஜமாத் எதுவும் செய்யவில்லை,தௌஹீத் அமைப்புகள் எதுவும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment