உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை; மைத்திரிக்கு எதிரான நடவடிக்கைக்கு பரிந்துரை விபரம்..



முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட

 நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனா

திபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணாந்து, முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் தமது பொறுப்பை நிறைவேற்ற தவ றியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்

பான விசாரணை அறிக்கை ஜனாதி பதி, அமைச்சரவை என்பவற்றுக்கு

வழங்கப்பட்டுள்ளதோடு நேற்று

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே

வர்தனவிடமும் கையளிக்கப்பட்

டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

பால சிறிசேன பாதுகாப்பு அமைச்ச ராக செயற்பட்ட போது 2019 ஏப்ரல் 16 முதல் 21 வரை இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விஜயம்

செய்தார்.

அந்த சமயம் பதில் பாது

காப்பு அமைச்சர் ஒருவரை நிய

மிக்காததன் மூலம் அவர் தமது

பொறுப்பை மீறியுள்ளதாகவும்

அதற்கமைய வேண்டுமென்றே

சஹ்ரான ஹாசிம் உள்ளிட்ட

பயங் கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு

வழியமைத்திருப்பதன் மூலம் அர

சியலமைப்பை மீறியுள்ளதாகவும்

அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்

டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

பால சிறிசேன, முன்னாள் பிரதமர்

ரணில் விக்கிரமசிங்க, முன்னாள்

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி

பெர்ணாந்து,முன்னாள் பொலிஸ்மா

அதிபர் பூஜித ஜெயசுந்தர தேசிய

புலனாய்வு முன்னாள் பிரதானி

சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு

பணிப்பளார் நிலந்த ஜெயவர்தன

உள்ளிட்ட நபர்கள் தாக்குதலை

தடுக்க தவறியதாக குற்றஞ்சாட்டப்

பட்டுள்ளது.

ஆணைக்குழுவால் பெறப்பட்ட

ஆதாரங்களின் அடிப்படையில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

சிறிசேன உள்ளிட்ட நபர்களுக்கு

எதிரான குற்றவியல் நடவடிக்கை

எடுப்பது குறித்து சட்டமா அதிபர்

ஆராய வேண்டும் எனவும் பரிந்து

ரைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !