கல்முனை கிறீன் பீல்ட் மக்களின் அவலம் கவலையான விடயம்..
கல்முனை கிறீன் பீல்ட் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்த்து
வைக்க அம்மக்களின் ஓட்டுக்களை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக முன்வர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
கல்முனை கிறீன் பீல்ட் மக்களின் அவலம் கவலையான விடயம்.
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கின் முக வெற்றிலையான கல்முனையை கிழக்கின் கக்கூசாக ஆக்கியதன் விளைவுதான் இவ்வாறு இன்று கக்கூஸ் கழுவவும் தண்ணீர் இல்லாத நிலை.
அம்மக்களின் ஓட்டுக்களால் மாநகர உறுப்பினராகி சம்பளம், கிம்பளம் பெறும் உறுப்பினர்கள் உள்ளனர்.
பாட்டுக்கும் கூத்துக்கும், கூச்சலுக்கும் மயங்க வைத்து அம்மகளின் ஓட்டுக்களால் வந்த எம் பிமார் உள்ளனர். கட்சித்தலைவர் ஹாயாக கொழும்பில் படுக்கிறார்.
இவர்களுக்கெதிராக, இவர்கள் பெயர்களை எழுதி ஜனநாயகரீதியில் பொலிஸ் அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் செய்யும்படி அம்மக்களை கேட்கின்றோம்.
இதுதான் உலமா கட்சி சொல்லும் ஆலோசனையாகும்.
இப்படி செய்தால் மீடியாக்கள் ஓடி வந்து பிரச்சினையை தேசிய மயப்படுத்து.
அதன் பின் ஏமாற்று அரசியல் அதிகாரங்கள் ஓடி வந்து வேலைகள் சரியாக நடக்கும்.
இனியாவது பணத்துக்கும், பாட்டுக்கும், உசார் படுத்தலுக்கும் மயங்காமல் கல்முனையை தலைமையகமாக கொண்ட கட்சியை பலப்படுத்த இம்மக்கள் முன்வர வேண்டும்.
Comments
Post a Comment