மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களுக்கு அரச செலவில் இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் வழங்கப்படும்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் சிக்கி . அங்கு இருந்து நாடு திரும்பும் இலங்கை தொழிலாளர்களுக்கு இலங்கை அரசு இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க உள்ளது.
COVID-19 நிலைமை காரணமாகநாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், பிற மருத்துவ, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள் தொடர்பான அனைத்து செலவுகளையும் தொழிலாளர் அமைச்சின் ஒரு பிரிவான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஈடு செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நபர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறன தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் கிடைக்கும்.
அண்மையில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா, SLBFE க்குள் ஒரு அமைப்பை உருவாக்கி, இலவச தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்க பொருத்தமான தனியார் ஹோட்டல்களை கண்டறியுமாறு அறிவுறுத்தினார் -
இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைக்க தேசிய கோவிட் -19 தடுப்பு பணிக்குழுவின் ஒப்புதலுடன் தனியாருக்கு சொந்தமான 10 சுற்றுலா ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளை தேர்வு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அமைச்சருக்கு தெரிவித்துள்ளது.
இந்த 10 ஹோட்டல்களில் ஒரே நேரத்தில் 571 பேர் தங்கலாம்.
ஹோட்டல் கட்டணம், உணவு மற்றும் பிற அனைத்து வசதிகளும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வழங்கப்படும். ஒரு நபரை அத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைத்திருக்க ஒரு நாளைக்கு 4,500 ரூபாய் செலவாகிறது எனவும் , அதே நேரத்தில்ஒரு முழு குழுவிற்கு இந்த வசதிகளை வழங்க வாரத்திற்கு 8 மில்லியன் ரூபாய் தேவைப்படும். திரும்பி வரும் தொழிலாளி ஒரு வாரத்திற்கு ஒரு மையத்தில் வைக்கப்படுவார். .
Comments
Post a Comment