சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுப்பு. #நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனம்
(யாக்கூப் பஹா த்)
இதற்கமைய முதலாவது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று
2021.03.30 அம்பாறை அம்/ஹேகொட சிறி இந்திரசார வித்தியாலயத்தில் இடம்பெற்றது
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் நிறுவனம் அம்பாறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு வெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்வில் வளவாளர்களாக அம்பாறை மாவட்ட செயலக உளநல சமுக உத்தியோகத்தர் யூ எல் அசார்த்தீன், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எஸ் ஜெகநாதன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தம்மிக்கா குலத்துங்க, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ எல் எம் . இர்பான், வெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் பொருளாளர் எஸ் ஏ பாஸித் அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment