வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு குடிநீர் வசதி
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு மிக நீண்ட நாள் தேவையாகக் காணப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தின் ஊட்டல் பாடசாலையாகக் காணப்படும் குறித்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் நன்மைகருதி பல்வேறு தரப்பினரிடமும் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நீர் வழங்கல் அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான இணைப்புச்செயலாளர் எஸ்.எம்.சிம்ஷானின் முயற்சியினால் குடிநீர்ப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியினை வழங்கிய நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கும் மாவட்ட நீர் வழங்கல் சபையின் பணிப்பாளர் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் இணைப்புச் செயலாளர் நன்றிகளைத் தெரிவிக்கிறார்.
Comments
Post a Comment