பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முஸ்லிம் பெண்கள் விடயத்தை மாத்திரம் அக்கறை காட்டாமல் - ஏனைய பாதுகாப்பு சார் விடயங்களிலும் அக்கறை கொள்ள வேண்டும்
நேற்று பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரினால் சாரதி ஒருவர்
மிலேச்சத்தனமாக தாக்கப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தனது கடுமையான அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடக பக்கங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது....
நேற்று பட்ட பகலிலே ஒரு லாரி சாரதி மீது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியது போல, சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் வழக்கறிஞரைத் தாக்கியது மற்றும் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆட்டிசம் நோயின் பாதிப்பிற்குள்ளான 14 வயது தாரிக் எனும் சிறுவனை இரக்கமின்றி அடிப்பது போன்றவை அனைத்தும் இலங்கையில் பொலிஸாரின் கொடூரமான செயற்பாடுகளின் போது பதிவான சம்பவங்களாகும் , இவ்வாறான எத்தனை சம்பவங்கள் பதிவு செய்யப்படாமலே தவறியிருக்கும்?
நாட்டின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் என கூறி முஸ்லீம் பெண்களை ஒடுக்க முயற்சிப்பதில் அதிக அக்கறை காட்டாமல், நீண்ட காலமாக நம் நாட்டை பாதித்து பற்றி எரியும் இதுபோன்ற பிரச்சினைகளில் தனது கவனத்தை செலுத்த வேண்டாமா?
என மக்கள் பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள் காட்டி தமது அதிருப்தியினை அலி ஸாஹிர் மௌலானா வெளியிட்டுள்ளார்.
Like yesterday’s attack by a police constable on a lorry driver in broad daylight, the assault on a young lawyer a few months ago and the merciless beating of autistic 14 year old Thariq less than a year ago are all recorded instances of rampant police brutality in Sri Lanka. How many more that were not recorded would have slipped between the cracks?
Shouldn’t our Public Security Minister direct his focus on these burning issues which have been plaguing our country for far too long, rather than being overly preoccupied with trying to oppress Muslim women allegedly on the grounds of national security?
Comments
Post a Comment