கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரை தேடி கையளித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்.பி.டி.துமிந்த . # மட்டக்களப்பு


 

 



பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வு

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தரான ஆர்.பி.டி.துமிந்த என்ற பொலிஸ் உத்தியோகத்தரே மேற்படி பணப்பையைக் கண்டெடுத்தார்.


அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்து கொண்டிருந்தபோதே மாவடி முன்மாரி பகுதியில் வீதியில் கிடந்த பணப்பையைக் கண்டெடுத்துள்ளார்.


குறித்த பணப்பையில் 11300 ரூபாய் பணம், சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்டவை இருந்துள்ளன.


குறித்த பணப்பைக்குச் சொந்தக்காரரான முனைக்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் கனிஸ்டன் உயர் வகுப்பு மாணவனிடம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க பணப்பையை ஒப்படைத்தார்.


பணப்பையைக் கண்டெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த வாரமே மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !