பொது மக்களின் அவல நிலையை. அறிந்த இரு தலைவர்கள் இன்று நாட்டின் தலைவர்களாகி விட்டனர் .

 




பொது மக்களின் அவல நிலையை அறிந்த இரு தலைவர்கள் இன்று நாட்டின் தலைவர்களாகி விட்டனர் என்றும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் எப்போதும் நாட்டையும் புத்தசாசனத்தையும் மனதில் கொண்டே முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.


கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 'இது ஒரு பௌத்த நாடு அல்ல' என்று கூச்சலிட்ட அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்றும் அன்று பிக்குமார்கள் சிறையிலடைத்து தண்டிக்கப்பட்டனர் என்றும் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசும் எதிர்க்கட்சி அப்போதைய அரசாங்கத்தில் தொல்பொருள் நிலையங்களை உடைத்து தரைமட்டமாக்கி வீடமைப்புக் கிராமங்களை அமைத்தது, தற்போதைய அரசாங்கம் மரங்களை வெட்டாமல் சுற்றுச்கூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் மக்களுக்காக வீடுகளைக் கட்டி வருகின்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புத்த சாசனத்துக்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக 'மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அநுராதபுர மாவட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு உரையாற்றினார். அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையில் நடைபெற்றது.

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோகனைக்கேற்ப, பௌத்த விவகார அமைச்சு மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 'மிஹிந்து நிவஹன' வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இந்த வீடமைப்புத் திட்ட ஆரம்பத்தின் போது வணக்கத்துக்குரிய புத்தன்னேகம அஸ்ஸஜீ தேரரின் பெற்றோருக்காக நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு அநுராதபுரம், சாலியபுர, புத்தன்னேகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய  வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் அநுராதபுர மாவட்டத்தில் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பௌத்த துறவிகளின் பெற்றோர்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன. 

இதன் முதலாவது கட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 2000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்காக 120 கோடி ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ராமன்ற மகா நிக்காயவின் வட மத்திய மாகாணத்தின் தலைமை சங்கநாயக்க வணக்கத்துக்குரிய பொத்தானே தம்மானந்த தேரர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அதிபர் மிரிசவெட்டிய ரஜமகா விகாராதிகாரி வணக்கத்துக்குரிய ஈதலவெட்டுன வெவெ ஞானதிலக தேரர், ஜெதவனாராம ரஜமகாவிகாரை தலைமையாளர் வணக்கத்துக்குரிய ஹல்மில்லவரதனபால தேரர், ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் தலைமையாளர் வணக்கத்துக்குரிய நுகேதென்னே பஞ்ஞானந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்  செஹான் சேமசிங்க, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற ஊறுப்பினர் கே.பீ.எஸ். குமாரசிறீ, வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். ரஞ்ஜித், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எச்.பீ. சேமசிங்க, மத்திய நுவரகம் மாகாண சபைத் தலைவர் பீ.பி.எம். ஜயசுந்தர, அநுராதபுரம் மேலதிக மாவட்டச் செயலாளர் (இடம்) சந்தயா அபேரத்ன, மத்திய நுவரகம் மாகாண சபை செயலாளர் ஆர்.எம்.ஜீ சேனாரத்ன மற்றும் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !