பௌத்த மதகுரு சாராயம் குடித்துவிட்டு பொலிசாருடனும், மக்களுடனும் கலாட்டா செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று (30.03.2021) காலி - ஜின்தோட்ட விகாரையில் நடைபெற்றுள்ளது.
அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ! அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு (Surfing) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதேவேளை, கொழும்பில் அல்லது வேறு எந்த பிரதேசத்திலும் இவ்வாறான விபத்து இடம்பெற்றதாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்ச...
தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு ! கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் ! நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். . இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். 5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் லொறி சாரத...
Comments
Post a Comment