தமிழீழ விடுதலை புலிகளை ஊக்குவிக்கும் YouTube மற்றும் இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் கைது.
எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு ஊக்குவிக்கும் வகையில் யூடியுப் அலைவரிசை மற்றும் இணையதளம் ஒன்றை முன்னெடுத்து சென்ற பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரில் இணையத்தளம் மற்றும் யூடீப் அலைவரிசை ஒன்றை நடத்திச் சென்ற இடம் அடையாளம் காணப்பட்டு அந்த இடம் இன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அந்த இடத்துக்கு பொறுப்பாக இருந்த 35 வயது பெண் ஒருவர் மற்றும் 36 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 05 கணினிகள் மற்றும் 05 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment