பிறந்தநாளுக்கு போதைப்பொருள் விருந்துபசாரம் நடத்திய ஆசிரியையும் 15 இளைஞர்களும் கைது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் மகனின் பிறந்த நாளை
முன்னிட்டு போதைப்பொருள் விருந்துபசாரம் ஒன்றை நடத்திய சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உட்பட 15 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யபட்டவர்களில் அவரது 02 பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வெள்ளவத்தை பகுதியில் வீடொன்றில் மதுபான விருந்தொன்று நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியை 42 வயதானவர் என்பதுடன், ஏனையவர்கள் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
SIVA Ramasamy
Comments
Post a Comment