1.850 கிலோ கிராம் கேரள கஞ்சா

 1.850 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பிறைந்துரைச்சேனையில் ஒருவர் கைது



வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையில் கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய ஒருவர் இன்று 26.04.2021ம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது செய்யப்பட்டவர் காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் பிறைந்துரைச்சேனையில் திருமணம் முடித்தவர் என்பதுடன், இவரிடமிருந்து சுமார் 1.850 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அத்துடன், இவருடன் சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் கைது செய்தவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டுள்ள புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதை வியாபாரம் மற்றும் பாவனையில் ஈடுபடுவோர் தொடர்பில் மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !