மதிலுக்கு மேலால் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டன.
மதிலுக்கு மேலால் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் கைப்பற்றப்பட்டன.
களுத்துறை சிறைச்சாலைக்கு மேலாக வீசப்பட்ட இரண்டு பொதிகளில் போதைப்பொருள், அலைபேசி
மற்றும் அலைபேசி உதிரிபாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹெரோய்ன் என சந்தேகிக்கப்படும் 158 பக்கெற்றுகள், 20 கிராம் கஞ்சா, இரண்டு அலைபேசிகள் மற்றும் 30 போதை வில்லைகள் என்பன ஒரு பொதியில் இருந்துள்ளன.
மற்றைய பொதியில் இருந்து மேலும் 06 அலைபேசிகள், இரண்டு அலைபேசி சாஜர்கள், புகையிலை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Post a Comment