கொரோனா நிலைமை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்கிறோம்.
கொரோனா நிலைமை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து செய்கிறோம்.
நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்து
செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
அதன்படி கட்சியின் அனைத்து மே தினக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்படும்.
முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நாளை காலை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மே தின நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
எனினும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment