கிளி பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது.

 கிளி பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது.

 



 சிங்கராஜ வனத்தின் எல்லைப்பகுதியில் நாட்டிலிருந்து அழிந்து வரும் அபூர்வ கிளி இனங்களை பிடித்து

வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நால்வரை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


சிங்கராஜா வனாந்தரப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் லங்காபேரி மற்றும் அமரசேகரபுர பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என சிங்கராஜ வனாந்தர பாதுகாப்பு அதிகாரி ஏ.ஆர்.பி.லியனகே தெரிவித்தார்.


"அலக்சாண்டரியன் பரகீட்  "எனும் கிளி இனங்கள் இலங்கையில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் பறவை இனங்களாகும். இப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் வனாந்தரத்தில் நுழைந்து இவற்றைப் பிடித்து அதிகவிலைக்கு விற்றுப் பணம் சம்பாதித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இதுதொடர்பில் நீண்ட நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021